தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களுக்கு அஞ்சி, வடமராட்சியில் சிறீலங்கா படைகள் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
யாழ் குடாநாட்டை மீட்பதற்கான படையெடுப்பை, நாகர்கோவில்
பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடுக்கக்கூடும் என்று,
தேசிய புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ள நிலையில், வடமராட்சி
கிழக்கு நாகர்கோவில் முதல் வடமராட்சி வடக்கு தொண்டைமானாறு
வரையான கடலோரப் பிரதேசங்கள் தோறும், சிறீலங்கா படை
அணிகள் உசார்படுத்தப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
குடத்தனை தொடக்கம் தொண்டைமானாறு வரையான கடலோரப்
பிரதேசங்களில், பொதுமக்களின் பார்வைக்கு தென்படக்கூடிய
வகையில், சிறீலங்கா படைகளால் புதிதாக காவலரண்கள்
நிர்மாணிக்கப்பட்டு வரும் அதேவேளை, குடத்தனையில் இருந்து
நாகர்கோவில் வரையான பகுதிகளை நோக்கி, பனங்குற்றிகளும்,
மண் சாக்குகளும் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment