Saturday, 2 August 2008

விடுதலைப்புலிகளின் தலைவர் தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார்--கருணா அம்மான்

சார்க் மாநாட்டை முன்னிட்டு விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்ட யுத்த நிறுத்த அறிவிப்போடு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இருப்பிடமாகத் தேர்வு செய்திருந்த முல்லைத்தீவை விட்டு புதுக்குடியிருப்பின் வடக்கு பகுதியொன்றுக்கு சென்றுவிட்டார் என அரச புலனாய்வு பகுதிகளுக்கு தெரியவந்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் முல்லைத்தீவை தனது பாதுகாப்புக்கு உகந்த இடம் என முன்பு தேர்வு செய்திருந்த போதிலும், தற்போது நடைபெறும் போர்ச் சூழல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவ இலக்குத் தாக்குதல்களிலிருந்து காத்துக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளின் தலைமை இம்முடிவை எடுத்துள்ளது எனவும் அது மேலும் எழுதியுள்ளது.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் இந்தோநேசியாவுக்கோ அல்லது அப்பகுதியில் உள்ள வேறொரு நாட்டுக்கோ செல்லும் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

No comments: