ஈழத் தமிழர்களையும், தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை படுகொலை செய்துவரும் சிறீலங்கா அரசு, சிறீலங்காவிற்கு உதவி செய்யும் இந்திய அரசு என்பவற்றைக் கண்டித்து, சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒன்றுகூடிய அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில், தீப்பந்தப் பேரணி நடத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை முன்வைத்திருந்தார்.
எனினும், தீப்பந்த பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு காவல்துறையினர், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கியிருப்பதாக, பழ.நெடுமாறன் ஐரோப்பிய தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.
பெரியார் சிலைக்கு முன்பாக ஆரம்பிக்க இருந்த பேரணிக்குப் பதிலாக, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் விடுதிக்கு முன்பாக நாளை மாலை 4:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், பெருந்திரளாக மக்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Saturday, 2 August 2008
சென்னையில் இந்திய, சிறீலங்கா அரசுகளைக் கண்டித்து நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment