Saturday, 2 August 2008

மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரை 7 யுத்தக்கப்பல்களை நிறுத்தியது இந்தியா

கொழும்பில் நடைபெறும் 'சார்க்கு' மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் சிங்கின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரையான கடற்பரப்பில் இந்தியா ஏழு கடற்படைக் கப்பல்களை நிறுத்தியுள்ளது.

இரு நாள் சார்க் மாநாடு கொழும்பில் நேற்று சனிக் கிழமை ஆரம்பமாயிற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வந்தார்.

பிரதமரதும் இந்தியக் குழுவினரதும் பாதுகாப்பபுக்காக மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணையில் கலிமார் முனை வரை இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை முழு அளவில் பலப்படுத்தியுள்ளது.

இந்தியக்கடற்படையனரின் நான்கு யுத்தக்கப்பல்களும் இந்திய கரையோரக்காவல் படையின் மூன்று கப்பல்களும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கiயில் ஈடுபட்;டுள்ளதாகவும் இதில் கடற்படையின் இரு கப்பல்களும் கரையோர காவல் படையினரின் இரு கப்பல்களும் மன்னார் வளைகுடாவிலும் கடற்படையின் இரு கப்பல்களும் கரையோரக் காவல் படையின் ஒரு கப்பலும் பாக்கு நீரிணையிலும் அதற்குச் சமீபமாகவும் தரித்து நிற்பதாகவும் அதிகாரயொருவர் தெரிவித்தார்.

இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு, சார்க் மாநாடு முடிந்த பின்னரும் எதிர்வரும் 7ம் திகதி வரையிருக்குமென்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை கடற்பரப்பில் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் பிரசன்னத்தை உறுதிப்படுத்திய மற்றோரு அதிகாரி ஐ.என்.எஸ்.மைசூர் மற்றும் ஐ.என்.எஸ்.ரன்வீர் ஆகிய இரு கப்பல்களும் விசேட கடற்கொமான்டோக்கள் சகிதம் கேந்திர முக்கிய நிலையங்களில் ரோந்து வருவதாகவும் தெரிவித்தர்ர்.

'தேவையேற்படும் போது அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது. அவர்கள் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்ட்டுள்ளனர். கலிமார் முனை முதல் ராமர் பாலம் வரயான கடற்பரப்பு பாதுகாப்பு வலையமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தர்ர்.

இதே நேரம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் அதற்கு அப்பாலுள்ள கடற்பகுதிகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படடுள்ளன.

மன்னார் வளைகுடாவிலும் பாக்கு நீரிணையிலும் நிறுத்தபட்டுள்ள போர்க்கப்பல்கள் ராஜ்புட் மற்றும் டெல்கி வகை நாசகாரிகளாகும். இந்தக் கப்பல்கள் சிலவற்றில் ஏவுகணைகளும் பொருத்தப்படடுள்ளன.

இதே நேரம், சென்னை மற்றும் இராமநாதபுரம் பகுதிகளிலிருந்து விமானப்படையினர் மேற்கொண்டு வரும் தீவிர கண்காணிப்புக்கு அப்பால் கற்படையினரின் கண்காணிப்பு விமானங்களும் உலங்குவானூர்திகளும் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கரையோர வழிமறிப்பு கலங்களும் ரோந்தில் ஈடுபட்டுள்ளதுடன் இராமேஸ்வரம் முதல் நாகபட்டினம் வரையினான சகல கடற்படை முகாம்களிலிருந்தும் முழு அளவிலான கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நன்றி தினக்குரல்.

No comments: