Friday, 15 August 2008

துறைமுகத்தில் வேலைவாய்பு எனக் கூறி கோடிக்கணக்காண பணம் மோசடி – சந்தேக நபர்கள் கைது

துறைமுகத்தில் வேவைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.


கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதாவும் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாகவும் கூறி ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்த சந்தேக நபர்களை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.


ஒருவர் தனது மகனுக்கு துறைமுகத்தில் தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 5 லட்சம் ரூபாவை சந்தேக நபர்களிடம் கொடுத்துள்ளார். உறுதிவழங்கப்பட்ட படி தொழில் கிடைக்காத நிலையில் பணம் கொடுத்தவர் துறைமுக அதிகார சபையிடம் சென்று விசாரித்துள்ளார்.


இதனையடுத்து துறைமுக மற்றும் விமான போககுவரத்து அமைச்சர் ஷமால் ராஜபக்ஸ அந்த நபரை கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினரிடம் அனுப்பி வைத்துள்ளார். இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பு மோசடி தடுப்பு பிரிவின் பணிப்பாளர் எம்.பி.சார்ளிஸின் ஆலோசனையின் படி தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

No comments: