Friday, 15 August 2008

கிளிநொச்சியை கைப்பற்ற மூன்று மாதங்கள் என கருணாவின் கடிகாரம் காட்டுகின்றதாம்

இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தி வருவதால் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற மூன்று மாதங்கள் போதுமானது என கருணா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் ஏதேனும் சமாதான பிரதேசம் ஒன்றை அறிவித்தால் வன்னி மக்கள் தடைகளை மீறி அரச கட்டுபாட்டு பகுதிகளுக்கு வருவர் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னைய செவ்வி ஒன்றில் வன்னியைக் கைப்பற்றுவது இலகுவான காரியம் அல்ல நீண்ட காலம் எடுக்கலாம் என கருணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: