Friday, 15 August 2008

மன்னார் எண்ணெய் அகழ்வு - விரைவில் இந்தியக் கம்பனியிடம்

மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வதற்கான அனுமதியை இந்திய நிறுவனமான கெய்ன் கொம்பனிக்கு விரைவில் வழங்கவுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்திச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்தார்.

மேற்படி நிறுவனத்துக்கு இந்த அனுமதியை வழங்குவதற்கான வரைபை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய் அகழ்வுக்கான முதல் தொகுதியை மேற்குறித்த இந்திய வம்சாவழிக் கொம்பனிக்கு வழங்குவதென கடந்த ஜுன் மாதம் ஆலோசிக்கப்பட்டதற்கு இணங்க அரசாங்கத்திற்கும் இந்தக் கொம்பனிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


குறித்த கொம்பனிக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கான சட்டமா அதிபரின் ஒப்புதலைப் பெற்றதன் பின்னரே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த எண்ணெய் அகழ்வை மேற்கொள்ள சுமார் 10 மில்லியன் டொலர் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வதற்கான பிரதேசம் 3000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

No comments: