Thursday, 7 August 2008

சார்க்கின் வெற்றி ஆண்டவனின் சாட்சி - ராஜீவைத் தாக்கிய சொய்ஸா இருந்திருந்தால மன்மோகன், நாராயணனின் கதி என்னவாகியிருக்கும்?? லக்ஷ்மன் செனவிரத்ன,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இடம்பெற்ற சம்பவமானது இலங்கைக்கு கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் சார்க்கின் போது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து வியப்பாக உள்ளது.


இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெய்யான கூற்றின் மூலம் நாராயணன் பிரச்சினையின்றி ரக்ஸியில் சென்றிருப்பதாக கூறி வெளிப்படுத்தியுள்ளனர்.

அப்படியாயின் இந்தியப் பிரதமருக்கு அவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லையா? அவரும் வாடகைக் காரில் வந்து கொழும்பில் இறங்கலாம் தானே?

தவறுகள் இடம் பெறுமாயின் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர அதனை சமாளிப்பதற்கென பொய்யான காரணங்களை கூறி எதனையும் மூடி மறைப்பதற்கு முற்படக்கூடாதுராஜீவைத் தாக்கிய சொய்ஸா இருந்திருந்தால மன்மோகன், நாராயணனின் கதி என்னவாகியிருக்கும்.


இலங்கை மீதிருந்த கரும்புள்ளி கருவடுவாக மாறியிருக்கும்.ராஜீவுக்கு நிகழ்ந்த அவமானத்தால் இலங்கையை உலக நாடுகள் கேவலமக நோக்கின. பீச் போய்கள் பாராளுமன்றுக்கு வந்துள்ளனர்.

ஒருவர் சவரக்கத்தியை காட்டி கமராவை களவெடுத்துச் சென்றார். மற்றோரு பீச் போய் ரயில் சங்கிலியை களவெடுத்துச் செல்கிறார்.பொலிஸ்மா அதிபர் நித்திரை கொள்கிறார்.பொலிஸாரின் முன்னிலையிலே ஊடகவியலாளர் தாக்கப்பட்டு கமரா பறிக்கப்பட்ட போது பொலிஸ் உயர் அதிகாரிகள் மறுபக்கம் திரும்பிக் கொண்டு நின்றார்கள்.

தமிழ் நாட்டில் புலிகளை ஓரம் கட்டுவதற்கு அரும் பாடுபடும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகருக்கு இவ்வாறு இடம்பெற்ற சம்பவமானது சாதாரண விடயமல்ல.


இதேவேளை இந்நாட்டு மக்கள் மூன்று வேளை உணவை,உண்ண முடியாத நிலையில் சார்க்கின்போது ஒரு நாள் உணவுக்கு மாத்திரம் 10ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

இது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று,சார்க்கின் வெற்றி ஆண்டவனின் சாட்சி என்றே கூறவேண்டும்.

No comments: