Saturday, 2 August 2008

வடக்கில் மாகாணசபையை நிறுவ முடியாது சவால் விடுத்துள்ளார் – சிவாஜிலிங்கம்

sivajilingam.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடித்து வடக்கில் மாகாணசபைகளை நிறுவப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித சாத்தியப்பாடுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


கிழக்கில் ஜனநாயக நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், குண்டர்களின் ஆட்சியே தற்போது கிழக்கில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த வருட இறுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து வடக்கை மீட்டெடுத்து முடியுமானால் தேர்தல்களை நடத்துமாறு தாம் அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


சில அமைச்சர்கள் யுத்தத்தை இந்த வருட இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என குறிப்பிட்ட போதிலும் இராணுவத் தளபதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருது தொடர்பில் உறுதியான காலக்கெடு ஒன்றை வழங்க முடியாதென தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி செயற்பட்டு கொண்டிருப்பதாக சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: