Thursday, 14 August 2008

பிரசார கூட்டத்தில் மக்கள் கூட்டம் குறைந்தமையால் ஏற்பாட்டாளர் தற்கொலை

பிரசார கூட்டத்தில் மக்கள் கூட்டம் குறைந்தமையால் ஏற்பாட்டாளர் தற்கொலை

வடமத்திய மாகாணசபை ஐ.ம.சு.கூ தேர்தல் பிரசாரத்திற்கு மக்கள் பங்களிப்பை பெறமுடியாமல் போனதன் காரணமாக மனம் உடைந்துபோன அதன் ஏற்பாட்டாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அனுராதபுர மாவட்டத்தில் கந்தீர்மலை கூட்டமைப்பு முதலமைசு வேட்பாளரான பேர்டி பிரேமலால் திசானாயக்கவின் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்த அவரது ஆதரவாளர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அக்கூட்டத்தில் 3 பேர் மாத்திரமே பங்குகொண்டதாகவும், இதனால் கோபம் கொண்ட முதலமைச்சு வேட்பாளரின் பாதுகாப்பாளர்கள் அவரை மிரட்டி தாக்க முயற்சித்துள்ளதாகம் இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஐ.தே.கட்சியின் தயாசிரி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

No comments: