Thursday, 14 August 2008

தேர்தல் தினத்தன்று வடமத்திய மாகாண மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்க பிள்ளையான் குளு சதி---‍ரணில்

பொலன்னறுவையின் எல்லைக்கிராமமான வெலிக்கந்தையில் பிள்ளையான் குழுவினர் அரசின் துணையுடன் முகாம்களை அமைத்து தேர்தல் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும்,


தேர்தல் தினத்தன்று வடமத்திய மாகாணம் முழுவதிலும் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


புதனன்று பொலன்னறுவை செவன்பிட்டியில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது,

அரசு வடமத்திய மாகாண சபை அதிகாரத்தையும் மத்திய அரசுக்கான அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு வடமத்திய மாகாணத்தில் இந்தத் தேர்தலில் மக்கள் இந்த அரசுக்குத் தக்க பாடம் புகட்டவேண்டும் எனவும் மோசடிமிக்க இந்த அரசை இந்த மாதம் 23 ஆம் திகதி விரட்டியடிக்க அனைவரும்
ஒன்றிணைய வேண்டும் என்று ரணில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

No comments: