Thursday, 14 August 2008

கனடாவிலிருந்தபடியே வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு- ஒக்டோபர் முதல் அறிமுகம்

கனடாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களும் தற்காலிக தொழில்புரியும் வெளிநாட்டுப் பிரஜைகளும் கனடாவில் இருந்தவாறே அந்நாட்டின் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய குடிவரவு சட்டவிதிகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது


இதுவரை மேற்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கும் கனடாவிலுள்ள அந்நாட்டு பிரஜாவுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியே விண்ணப்பிக்க வேண்டியிருந்தது அதன் காரணமாக இந்த நிரந்தர வதிவிட உரிமை பெறும் நடைமுறையானது 6 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்டகாலத்தை எடுக்கும் செயற்கரமாக இருந்து வந்தது.


இந் நிலையில் புதிய கனடிய அனுபவ வகுப்பு செயற்கிரமமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கனடிய குடிவரவு அமைச்சர் டானி பின்லே தெரிவித்தார்.


இதன் பிரகாரம் சில குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்களும் வெளிநாட்டு மாணவர்களும் கனடாவில் இருந்தபடியே நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் எனக்கூறிய டானி பின்லே இந்த புதிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கும் திட்டத்தின்கீழ் வருடாந்தம் 12,000 முதல் 18,000 பேருக்கு வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளதாக கூறினார்.

No comments: