அரசாங்கத்தினால் நியாயமற்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு வாகன ஒலி எதிர்ப்பு போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கியதேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், காவற்துறை உத்தரவுகள் என்பவற்றை பொருட்படுத்தாது போராட்டத்தில் பெருமளவிலானவர்கள் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.
இன்று (யூன்3) இலங்கை நேரப்படி நணபகல் 12.00 மணிக்கு வாகனங்களை ஐந்து நிமிடங்களுக்கு நிறுத்தி வாகனத்தின் ஒலியை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐக்கிய தேசியகட்சி இன்று நடத்தும் வாகன கவன ஒலி எழுப்பல் போராட்டத்தின் மீது இடைக்கால தடையுத்தரவை விதிக்கமுடியாது என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை ஆட்சேபித்து ஐக்கிய தேசியகட்சி இன்று நடத்தும் வாகன கவன ஒலி எழுப்பும் போராட்டத்திற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை விதிக்கவேண்டும் எனக்கோரி காவல்துறையினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிவான் நீதிமன்றம் அரசியலமைப்பின் சுதந்திரமான கருத்து வெளிப்படுத்தல் தொடர்பில் குற்றவியல் சட்டத்தினால் கட்டுப்படுத்த முடியாது எனக்குறிப்பிட்டது. இந்தநிலையில் காவல்துறையினரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
Tuesday, 3 June 2008
அரசாங்க அழுத்தங்களையும் மீறி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒலி எழுப்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment