சம்பளங்களை அதிகரிக்குமாறு நீதித்துறையினர் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதித்துறையினரின் சம்பள அதிகரிப்புத் தொடர்பாக பிரதமநீதியரசர் சரத்.என்.சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, திறைசேரி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர, சம்பள ஆணைக்குழுவின் தலைவர் லயனல் பெர்னான்டோ ஆகியோருக்கிடையில் அலரிமாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. எனினும், தற்பொழுது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக நீPதிபதிகளின் சம்பளத்தை அதிகரிக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
"300 நீதிபதிகளுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கினால் தொடர்ச்சியாக அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளங்களை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார். நீதிபதிகளின் சம்பளம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர் ஆகியோரின் சம்பளங்களுடன் தொடர்புபட்டுள்ளது. எனவே, நீதிபதிகளின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டால் ஏனையவர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். எனினும், அரசாங்கம் பாரிய சம்பள அதிகரிப்பொன்றுக்குச் செல்வது கடினமானது" என ஜனாதிபதி கூறியிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் அந்த ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளன.
ஒரு மில்லியனுக்கும் மேலதிகமான அரசாங்க ஊழியர்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் ஒருதரப்பு அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரம் சம்;பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிபதிகளின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் கடந்த மே மாதம் 21ஆம் திகதி அடிப்படை உரிமை மனுவொன்;று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment