Monday, 2 June 2008

துணைக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணும் அரச அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த முடியும்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் விடுத்த கோரிக்கை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவருடனான தொடர்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு கோருவது நியாயமற்றதென அரசாங்கப் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

துணைக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணும் அரச அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த முடியும் என பிலிப் அல்ஸ்டன் தெரிவித்திருந்தார்.

No comments: