அரசாங்கம், தமிழீழ விடுதலைப்புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அல்லது அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். கொழும்பின் புறநகர் கொலன்னாவையில் நேற்று யூன்2 நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கம் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
அல்லது அனைத்துகட்சி மாநாட்டின் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கவேண்டும். அத்துடன் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment