இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இலங்கையின் நட்பு நாடு எனவும், கடந்த காலங்களில் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இஸ்ரேல் உதவி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் மொசாட் அமைப்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயற்சி வழங்கப்படுவதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்குவதன் மூலம் இஸ்ரேல் எவ்வித நன்மையும் அடையப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்துறை முதல் இராணுவ ஒத்துழைப்பு வரை அனைத்து விடயங்களிலும் இலங்கைக்கு உதவி வழங்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களினால் இலங்கை படையினருக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்த உள்ளதாகத் தெரியவருகிறது.

No comments:
Post a Comment