Tuesday, 3 June 2008

தமிழீழ விடுதலைப்புலிகள் கிராமத்துக்குள் பிரவேசித்துள்ளதாக நினைத்து,பதுளையில் மக்கள் ஓட்டம்

பதுளைக் கிராமத்தில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடிய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கருதப்படும் ஒருவர் கிராமம் ஒன்றில் உள்ள சிலரை தாக்கியமையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் பிரவேசித்துள்ளதாக நினைத்து பதுளையில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடியுள்ளனர்.

குறித்த மனநிலை பாதிக்கப்பட்டவர் நேற்று மூதாட்டி ஒருவரை கொலை செய்ததுடன் சிலரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து கிராமத்தில் வதந்தி பரவியது. தமிழீழ விடுதலைப்புலிகள் கிராமத்துக்குள் பிரவேசித்துள்ளதாக நினைத்து, மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடத்தொடங்கினர். பின்னரே உண்மை நிலை தெரியவந்ததாக கூறப்படுகிறது.

No comments: