இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள எண்ணெய் அகழ்வுப் பணியினை வரவேற்றிருக்கும் நாட்டின் 83 வீதமான மக்கள், இதற்குப் பொறுப்பாக அரசியல்வாதிகள் நியமிக்கப்படக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.
இலங்கையின் பிரபல வர்த்த சஞ்சிகையான எல்.எம்.டி சஞ்சிகை நடாத்திய கருத்துக் கணிப்பிலேயே மக்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
" இலங்கை மிக விரைவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இணைந்து கொள்ளவுள்ளதாக பெருமளவான மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய சுமார் 70 வீதத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை எதிர்காலத்தில் எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிக்கும் என நம்புகின்றனர். அத்துடன், நடாத்தப்பட்டிருக்கும் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்வதற்குப் போதுமான நிலவியல்பைக் கொண்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன என பெரும்பாலானோர் கருதுகின்றனர்" என்றும் எல்.எம்.டி சஞ்சிகை தெரிவித்துள்ளது.
"மிகப் பெரும்பான்மையானோர் (10 இல் 9 பேர்) இலங்கை ஒரு பணக்கார நாடாக மாறும் என நம்புகின்றனர். அத்துடன் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்கான பெரும் செலவினத்தைச் சுட்டிக்காட்டும் அவர்கள் , இதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என்றும் இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் உண்மையான வளர்ச்சியைக் காணும் என்றும் குறிப்பிடுகின்றனர்" என அச் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அதேவேளை, இதில் பங்குபற்றிய 88 வீதமானோர், எண்ணெய் அகழ்வுக்கான திட்டத்தில் நாட்டின் அரசியல்வாதிகள் எவரும் சம்பந்தப்படக்கூடாது எனவும், அவ்வாறு அவர்கள் தலையிட்டால் நிச்சயம் ஊழல்கள் நிகழும் என்றும் கருதுகின்றனர்.
இதன்பொருட்டு , எண்ணெய் அகழ்வுத் திட்டமானது, எண்ணெய் உற்பத்தித் துறையிலுள்ள உள்ளூர், வெளிநாட்டு துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இந்தியன் ஒயில் கம்பனி ஆகியவற்றின் மேற்பார்வையிலேயே நடைபெற வேண்டும் எனவும் அவரகள் கருதுத்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், எண்ணெய் அகழ்வில் ஈடுபடுகின்ற இந்தியா, சீனா, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவிகள் இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும் என்றும் என்றும் கருத்தக் கணிப்பில் பங்குபற்றியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment