மிக் போர் விமான கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுகுழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தியது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல ஐக்கிய தேசிய கட்சிக்குள் எதுவித உட்பூசல்களும் இல்லை எனவும் அரசாங்கம் பிரச்சினையை உருவாக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால், மிக் போர் விமான கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுகுழு சட்டத்திற்கு அமைய செயலிழந்தது.
இந்த நிலையில் மிக் போர் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய நாடாளுமன்ற தெரிவு குழுவை அமைக்க வேண்டும் என்ற யோசனையை ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாகவும் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, 10 June 2008
மிக் போர் விமானம் கொள்வனவு மோசடி பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - ஐ.தே.க அறிவித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment