படைவீரர்கள் தினத்தில் இந்தியாவிற்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கைப் படைவீரர்களுக்கு யுத்தத்தை வெற்றிகொள்ளும் இயலுமை இல்லை என இந்திய ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்றுவரும் குண்டுத் தாக்குதல்களின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தோல்வியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பாதகமான கிரகநிலைக்கு பரிகாரம் பெற்றுக்கொள்ள ரணில் இந்தியா சென்றுள்ளதாக அந்த நாளேடு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பேருந்துக் குண்டுத் தாக்குதல்களின் மூலம் சிவில் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்ப மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை முப்படையினர் மற்றும் காவற்துறையினரால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாதென மல்வத்து நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மக்களின் உதவியுடன் மாத்திரமே இதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment