Tuesday, 10 June 2008

பிரிவினைவாதம் கொசோவோவில் இருந்து ஈழம் வரை--ஜே.வீ.பீ

anura-kumara.jpgநாட்டில் பிரிவினைவாத்தை ஸ்தாபிக்க ஏகாதியத்தியவாதிகள் உட்பட அவர்களுக்கு நெருக்கமான அமைப்புகள் பல்வேறு கருத்தியல்களை முன்வைத்து, நாட்டை மீண்டும் ஈழத்தை நோக்கி நகர்த்தி வரும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


இதனை அரசியல் ரீதியாக தோற்கடிக்கும் பொறுப்பை நாட்டின் இளைய தலைமுறையினர் ஏற்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.


பிரிவினைவாதம் கொசோவோவில் இருந்து ஈழம் வரை????என்ற தலைப்பில் மஹாரகம தேசிய இளைஞர் சேவை மண்டபத்தில் சமவுடமைவாத இளைஞர் அமைப்பு ஒழுங்கு செய்த கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


படையினர் தமது உயிர்களை துச்சமென மதித்து கிழக்கை விடுவித்தனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களை ஜனநாயக நீரோட்டத்திற்குள் உள்வாங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும்.

எனினும் அரசாங்கம் தனது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றவில்லை. இதற்கு மாறாக அரசாங்கம் கிழக்கு மாகாண மக்கள் மீது பலவந்தமாக தேர்தல் ஒன்றை திணித்தது. கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திடம் தேர்தல் ஒன்றை கோரியிருக்கவில்லை எனவும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஹக்கீமை பயன்படுத்தி கொண்டது, அரசாங்கம் ஹிஸ்புல்லாவை பயன்படுத்தி கொண்டது.

முஸ்லீம் மக்கள் பெருபான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு சென்று ஹிஸ்புல்லாவுக்கு வாக்களியுங்கள், அப்போது முஸ்லீம் தலைவரை முதலமைச்சராக நியமிக்காலம் என கூறினர்.


தமிழ் மக்கள் பெருபான்மையாக வாழும் பிரதேசங்களுக்கு சென்று பிள்ளையானுக்கு வாக்களியுங்கள் அப்போது, தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்கலாம் என குறிப்பிட்டனர். இது மிகவும் தவறான நடவடிக்கை. இதன் மூலம் கிழக்கில் பாரியளவில் இனவாதம் வெளிகாட்டப்பட்டது.


இந்த இனவாத்தின் பிரதிபலனாக இன்று கிழக்கை எவராலும் கட்டுபடுத்தமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது இது மீண்டும் பிரிவினைவாதத்தை நோக்கி சென்றுள்ளது. சில பத்திரிகைகள் கிழக்கில் புதிய பயங்கரவாதம் தோற்றம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.


சம்மாந்துறை, பொத்துவில் பிரதேசங்களில் புதிய இனவாதம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமாரதிசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை அனைவருக்கும் பொதுவான நாடு, சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான நாடு, இந்த நாட்டில் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும்.


நாட்டில் பிரிவினைவாதம் வெற்றிபெற்றால் அது கவலைக்குரிய விடயம் பூகோள ரீதியாக இலங்கையில் தனித்தனிய பிரித்து, பொருளாதார பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கில் 12 சதவீத தமிழ் மக்களே வாழ்கின்றனர். அதிகமான தமிழ் மக்கள் இந்த பிரதேசத்திற்கு வெளியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அவர்களுக்கு எப்படி உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியும். பலசந்தர்ப்பங்களில் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.


காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இதன் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் மக்களில் ஒருவருக்கொருவர் இடையே சந்தேகம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் தமிழ், சிங்கள முஸ்லீம் நடுதர வகுப்பு மக்கள் இனவாத அடிப்படையில் பிரிவடைந்தனர்.


இதன் மூலம் செல்வந்த வகுப்பு மக்கள் லாபமடைந்தனர். சைப்பரஸ், கொசோவோ, ஈராக், பனாமா ஆகிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் ஆக்கிரமித்தன, எனினும் இலங்கையை மாத்திரமே அவர்களால் வெற்றிகொள்ள முடியாதுள்ளது.


படையினர் பிரிவினைவாதத்தை தோற்கடித்தன் மூலமே அவர்களால் ஆக்கிரமிக்க முடியாது போனது. பூநகரி முதல் கிழக்கு வரை பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு இருந்தாலும் அரசியல் ரீதியான பிரிவினைவாதம் தொடர்ந்தும் நாட்டில் செயற்பட்டு வருகிறது.


இந்த அரசியல் பிரிவினைவாதத்தை தோற்கடிக்க ஜே.வீ.பீயின் சமவுடமைவாத இனைஞர் அணியின் கீழ் அணித்திரளுமாறு ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

No comments: