விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்றவுடன் அந்த தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பும் ரகசிய ஊடகவியலாளர்கள் குழு குறித்து புலனாய்வுதுறையினர் தகவல்களை கண்டறிந்துள்ளனர் என அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாழிதல் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொலையுண்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புலி தலைவர்களின் கணனிகளுக்கு அனுப்பியுள்ளமை தொடர்பான உதாரணத்தை புலனாய்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளிநாடுகளில் உள்ள புலிகளின் தலைவர்கள் காணவும் அறிந்து கொள்ளவும் முடிந்துள்ளது.
அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே குண்டு தாக்குதலுக்கு இலக்கானது முதல் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வரை ஒரு ஊடக நிறுவனம் புகைப்படம் எடுத்திருந்தது. சம்பவம் நடைபெற்ற 5 நிமிடங்கள் செல்லும் முன்னர் அமைச்சரின் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த 5 நிமிட சிறிய நேரத்திற்குள் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் கொலை தொடர்பான புகைப்படங்களை புலிகளின் தலைவர்களுக்கு அனுப்பியது யார் என்பது குறித்து அறிய புலனாய்வுதுறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையில் வெளியிடப்படாத புகைப்படங்களையும் தகவல்களையும் அமைப்பாக செயற்படும் ஒரு குழுவினால் புலிகளுக்கு அனுப்பபட்டுள்ளதாக புலனாய்வுதுறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தென்பகுதிகளில் இடம்பெறும் புலிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களையும் புகைப்படங்களையும், சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே அனுப்புவதற்காகவே செயற்படும் குழுவாக இருக்கலாம் என புலனாய்துறையினர் சந்தேகின்றனர்.
இவ்வாறு அனுப்பபடும் புகைப்படங்களை கொண்டு புலிகள் வெளிநாடுகளில் தமது வீரசெயல்கள் குறித்த பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைதவிர பாதுகாப்பு தரப்பினரின் ரகசிய தகவல்கள் கூட இந்த குழுவினரால் புலிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் கொலையை அடுத்தே இந்த குழுவினர் குறித்து புலனாய்வுதுறையினர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். புலிகளுடன் தொடர்புகளை வைத்துகொண்டு இவ்வாறான தகவல்களை புலிகளின் தலைவர்களுக்கு வழங்குவது யார் என்பது குறித்து சந்தேகிக்கும் சிலர் உள்ளதாக புலனாய்வுதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் எனவும் அந்த சிங்கள நாழிதல் இன்று வெளியிட்டுள்ள
முதற்பக்க தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியின் மூலம் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீது இலக்கு வைக்கப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment