யாழ்பாணத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு ஊரெழு படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏழாலையில் தங்கியிருந்து யாழ் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் இந்த மாணவன் கிளிநொச்சியைச் சொந்த இடமாகக் கொண்டவர்.
நேற்று செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் ஏழாலையில் அமைந்துள்ள இவரது வீட்டிக்கு உந்துறுளிகளில் சென்ற 25 சிறீலங்காப் படையினர் இவரைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர்.
இவரது விடுதலை தொடர்பில் அரச அதிகாரிகளிடம் தெரிவித்த போதும் இதுவரை மாணவன் விடுதலை செய்யப்படவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏழாலையில் பெரும் பதற்றம் காணப்படுகின்றது.

No comments:
Post a Comment