அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளேயின் விசாரணைகளை அரசங்கம் மூடிமறைக்க முயற்சிப்பதாக ஜே.வீ.பீயின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் குற்றம்சுமத்தினார்.
அரசாங்கத்திற்கு எதிரான அமைச்சர்களை கொலை செய்யும் சூழ்ச்சி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அமைச்சரின் கொலைத் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு ரகசிய காவல்துறையினரின் காவலில் இருந்த பெண் சயணைட் உட்கொண்டு மரணமடைந்தமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ஜே.வீ.பீ உறுப்பினரின் குற்றச்சாட்டை மறுதலிப்பதாக குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் உள்ள வாகனங்களை திருடிய ஜே.வீ.பீயினர், வங்கிகளை உடைத்து கொள்ளையிட்டவர்கள், மனித கொலைகளில் ஈடுபட்டவர்கள் ஜே.வீ.பீயில் இருப்பதாகவும், ஜே.வீ.பீயினர் பயங்கர திருடர்கள் எனவும் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே குற்றம்சுமத்தினார்.
No comments:
Post a Comment