Thursday, 5 June 2008

தேர்தல்களுக்கு முன்னர் நின்மதி - தற்போது மரணபீதி - காத்தான்குடி மக்கள்

கிழக்கு மாகாணசபை தேர்தல்களின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக காத்தான்குடி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் என சிங்கள நாழிதல் செய்தி வெளியிட்டுள்ளது.


கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையானின் ஆயுதங்கள் களையப்படும்வரை மாகாணசபை அமர்வுகளில் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொள்ளக் கூடாதென அவர்கள் கோரியுள்ளனர்.

நேற்றைய தினம் காத்தான்குடியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச மக்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மாகாணசபை தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் தாம் வாழ்ந்து வந்ததாக முஸ்லிம் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் 5 ஆவது நாளாக இன்றும் அங்கு பதட்டம் தொடர்கிறது. இன்று முற்பகல் இடம்பெற்ற வன்முறைகளில் 5 பேர் காயம் அடைந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: