ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பியவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்தி குறித்து தகவல் வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள உள்ளதாக வெளியான செய்திகள் அரசாங்கத்தைச் சேர்ந்த சிலரினால் உருவாக்கப்பட்ட வதந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்த சுயாதீனமுடைய எவரும் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள கனவில் கூட நினைக்க மாட்டார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள எஸ்.பி. திஸாநாயக்க தற்போது ஜப்பானில் உள்ளதாகவும், நாளைய தினம் நாடு திரும்ப உள்ளாகவும் தெரியவருகிறது
Thursday, 5 June 2008
சித்த சுயாதீனமுடைய எவரும் ராஜபக்ஸவுடன் இணையமாட்டார். எஸ்.பீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment