பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பாராளுமன்றத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பது சிறப்புரிமையை மீறும் செயல் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்துக்கு வரும்போது எச்.எஸ்.பி.சி. சந்திப் பகுதி மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் சிலர் தனது வாகனத்தை மறிக்கமுற்பட்டதாக ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவிடம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்துக்கு வரவிடாமல் தவிர்ப்பது சட்டவிரோத நடவடிக்கை என்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை மீறும் செயலென ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக சிறப்புரிமைக் குழுவுக்கு அறிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் உறுதிமொழி வழங்கினார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஏற்றுமதிச் சலுகையை நிறுத்துவதற்கே ரணில் விக்ரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டதாகக் கூறி பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது
Thursday, 5 June 2008
பாராளுமன்றம் செல்லவிடாமல் தடுப்பது சிறப்புரிமையை மீறும் செயல்- ரணில் விக்ரமசிங்க
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment