சுமக்க முடியாத பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜே.வி.பி. இன்று (ஜூன்4) நுகேகோடையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து, லஞ்ச ஊழலை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றுமாறு ஜே.வி.பி. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்ஹெத்தி தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கொழும்புப் பிரதேச மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Wednesday, 4 June 2008
பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஜே.வி.பி.யினால் பாரிய எதிர்ப்பு போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment