அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் குற்றம் சாட்டியுள்ளார். |
அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியூடாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் அளித்த நேர்காணல்: வடபகுதியில் சிறிலங்காப் படையினரின் அண்மைய முன்நகர்வு நடவடிக்கைகளால் 20,000 தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிறிலங்காப் படையினர் பெரும் தொகையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஒரு அங்குலம் உள்நுழைந்தால் கூட மேலதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும். வடபகுதி முன்னரங்க நிலைகளில் உக்கிரமான மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. சிறிலங்காப் படையினருக்கு பெருமளவு இழப்புக்களை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். அமைதிப் பேச்சுக்களைப் பொறுத்த வரையில் நாம் முதலில் நோர்வே அனுசரணையாளர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் என்ன கருதுகின்றனர் என்பதனை நாம் அறிய வேண்டியுள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை. அதுதான் பிரச்சினை. நாம் நோர்வேத் தரப்பினருடன் நேரடியாக பேச வேண்டியது முக்கியமானது. ஆனால் நோர்வேத் தரப்பினரை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுக்கிறது. நோர்வே அனுசரணையாளர்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கின்றது. சிறிலங்காப் படையினரது தொடர்ச்சியான வான்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுக்களால் மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பெரும் தொகையான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றார் சீவரத்தினம் புலித்தேவன். www.puthinam.com |
Tuesday, 10 June 2008
அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தயாராக இல்லை: புலித்தேவன் குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment