Tuesday, 10 June 2008

ஜனாதிபதி லண்டனில் இருக்கும் போது சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ லண்டன் சென்றுள்ள நிலையில்,இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபையினால் பொதுநலவாய நாடுகள் செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.

பி.பி.சீ. யின் சந்தேசய நிகழ்;ச்சியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் ஊடக அடக்குமுறை மற்றும் பல்வேறு சித்திரவதைகள் குறித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகள் நிலைமை நாளுக்கு நாள் வெகு விரைவில் சீர்குலைந்து செல்வதாகவும், இதனால் சர்வதேச சமூகத்தின் விசேட அவதானம் இலங்iயின் பால் திரும்பியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பணிப்பாளர் சேம் சர்பி தெரிவித்துள்ளார்.


சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை எனவும், இலங்கையின் யுத்தத்தை சர்வதேச சமூகம் மறந்து விடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவிலியன்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: