அரசாங்கத்தினால் ஊடகங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜே.வி.பி. நாடு தழுவிய ரீதியில் சுவரொட்டி பிரசாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
'மக்கள் சார்பான, ஊடக அடக்குமுறைக்கு எதிராக அணி திரளுவோம்" என்ற கோசமடங்கிய சுவரொட்டிகளை இன்றைய தினம் நாடு முழுவதும் காணக்கூடியதாக உள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஓர் நடவடிக்கையாக இந்த சுவரொட்டி பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாடு பூராவும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், இறுதி நிகழ்வாக கொழும்பில் பாரிய எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Tuesday, 10 June 2008
ஊடக அடக்கு முறைக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் ஜே.வி.பி. சுவரொட்டி பிரசாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment