மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதன் காரணமாக, மூன்றாவது நாளாகவும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக காத்தான்குடியூடான வாகனப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பாடசாலைகள், அரசாங்க அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் எதுவும் இயங்கவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் கல்லடிப் பிரதேசத்தில் வைத்து காத்தான்குடியைச் சேர்ந்த குத்தூஸ் முகம்மது பாரூக் என்பவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தே இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நிலைமையை வழமைக்குக் கொண்டுவருவது தொடர்பில் காத்தான்குடி வர்த்தக சங்கத்தினருடன் கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹிஸ்புல்லா கூட்டமொன்றை நடாத்திய போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
இதற்கிடையில், இன்று காலை மட்டக்களப்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, காத்தான்குடிப் பிரதான வீதியில் ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் டயர்களைப் போட்டு எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரப்பாட்டத்தில் ஈடுபடுவோர் அரச தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்புவதாகவும், நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வில் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இருவரும் வீடு வந்து சேர்ந்துவிட்டதாகவும், ஆனால் இன்னமும் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றநிலை நீங்கவில்லை எனவும் தெரிவித்தார்.இந்த நிலையில் காத்தான்குடியில் பெருமளவு இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிற
No comments:
Post a Comment