Tuesday, 3 June 2008

மஹிந்த ராஜபக்ஷவின் கிரகநிலை சரியில்லையாம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கிரக நிலை பாதகமாக காணப்படுவதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதி நாடு திரும்ப மாட்டார் எனத் தெரியவருகிறது.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரியவருகிறது.

எதிர்வரும் 7ம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்படி ஜனாதிபதி சற்று கால தாமதமாகியே நாடு திரும்ப உள்ளார். ஜோதிடர்களின் ஆலோசனைப் படி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சில தினங்கள் ஜனாதிபதி நாட்டிலிருப்பது அவருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: