உலகச் சந்தையிலிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதாக அரசாங்கம் பொய்ப்பிரசாரம் செய்வதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரிஸ்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஜே.வி.பி. முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நூலக சேவை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ரிஸ்வின் சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமான எதிர்ப்புப் போராட்டம் பாரிய மக்கள் எதிர்ப்பு அலையாக வியாபிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிலிருந்து குறைந்த விலைக்கு அரசாங்கம் எரிபொருளைப் பெற்றுக் கொண்டு உலகச் சந்தை விலையேற்றத்தைக் காரணம் காட்டி விலையேற்றத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment