Monday, 11 August 2008

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை 100 வீதம் ஏற்றுக்கொள்ள முடியாது – மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பி.பி.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

www.tamilwin.com

No comments: