Saturday, 16 August 2008

படையினருக்கு எதிரான இறுதிப் போராட்டம் - வன்னியில் 1000 புலிகள் விசேட பயிற்சியில் - கொழும்பு ஊடகம்

வன்னி கட்டுபாடற்ற பகுதிகளை மீட்டு முன்னேறி வரும் படையினருக்கு எதிராக இறுதி போராட்டத்தை நடத்தும் நோக்கில் ஆயிரம் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த இறுதி பேராட்டத்தை தீபனிடம் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒப்படைத்துள்ளதாகவும் தீபனின் தலைமையின் கீழ் இந்த பயிற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மணலாறு பிரதேசத்தின் ஊடாக முல்லைத்தீவு நகரை நோக்கி செல்லும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தும் பொறுப்பு சொர்ணத்திடம் வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் இருந்து முன்னேறி செல்லும் படையினரை எதிர்கொள்ளும் பொறுப்பு பானுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தீபனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவராக கருத்தப்படும் விக்கிஸ் என்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கடந்த 10 ஆம் திகதி படையினரின் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments: