வடபோர்முனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மோதல்களில் கடந்த மாதம் மாத்திரம் 106 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 662 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் பேசியபோதே அவர் இத்தகவலை கூறினார்.
அத்துடன் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அது 72 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 84 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.

No comments:
Post a Comment