Wednesday, 6 August 2008

ஊடகசுதந்திரத்தை வேண்டி மகஜரில் கையெழுத்து - தேசத்துரோக செயல் - விமல்

படையினர் வடக்கை கைப்பற்றும் தீர்க்கமான இந்த சந்தர்ப்பத்தில் ஊடகசுதந்திரத்தை வேண்டி மகஜரில் கையெழுத்து பொறுவதானது காலனித்துவத்தின் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தேசத்துரோக செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.


மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மாதாந்த சஞ்சிகையான கிருளவின் முதலாவது இதழ் வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வன்முறைகளை தடுத்து நிறுத்தி ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வீ.பீ உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் இணைந்து கையெழுத்தை பெற்றுவரும் கூட்டு மகஜர் குறித்து விமல் வீரவன்ஸ கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


பயங்கரவாத்திற்கு உதவி செய்யும் ரணில் விக்கிரமசிங்க, வாசுதேவ நாணயக்கார, மங்கள் சமரவீர, ஆர். சம்பந்தன், பி.சந்திரசேகரன், விக்கிரமபாகு கருணாரட்ன, மனோகணேசன் மற்றும் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோருடன் இணைந்து ஜே.வீ.பீயினரும் இந்த மகஜரில் கையெழுத்திட்டு வருகின்றனர். இதன் மூலம் அந்த கட்சி எந்த திசையை நோக்கி செல்கின்றது என்பதை தேசப்பற்றுள்ள மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

No comments: