சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விதிவிலக்கு அளிக்கப்பட்டதே தவிர எந்தவொரு நாட்டின் படையும் இலங்கைக்கு வரவில்லையென சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சார்க் மாநாட்டின்போது எந்தவொரு நாட்டின் படைகளும் இலங்கைக்கு வராதென சபை முதல்வர் கடந்த சபை அமர்வின்போது உறுதிவழங்கினார்.
ஆனால்,இந்திய யுத்தக் கப்பல்கள் வந்தன.அந்நாட்டின் ஹெலிகள் எமது வான் பரப்பில் பறந்தன.துருப்புகள் வந்தன.
இவ்வாறான நிலையில் பொறுப்பு வாய்ந்த சபை முதல்வர் பொய்யான தகவல்களை வழங்கி சபையை தவறாக வழிநடத்தியுள்ளாரென ஐ.தே.க.எம்.பி.ரவிகருணாநாயக்க குற்றம்சாட்டினார்.
இதற்குப்பதிலளிக்கும் போதே, சார்க் நாடுகளின் தலைவர்கள் இலங்கை வரும்போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சில விதிவிலக்குகள் உண்டென நான் கூறினேன்.
ஆனால்,3,000 துருப்பினர் இலங்கைக்கு வரவில்லை என்பதை நான் இப்போதும் கூறுகின்றேன் என்றார்.அப்போது எழுந்த ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க,இந்தியப் பிரதமரின் பாதுகாப்பில் இந்திய அரசின் தலையீடு அதிகம் இருந்ததெனக் குற்றம் சாட்டினார்.
இதேவேளை சார்க் மகாநாட்டின் முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டுக்குமென சிறிலங்காவுக்கு ஆயுத உதவிசெய்து வரும் ஒரு நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்களை கோத்தபாயா கூலிக்கு அமர்த்தி ஆலோசனை பெற்றிருந்ததாக நம்பகரமான பாதுகாப்பு வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.குறித்த பாதுகாப்பு ஆலோசகர்கள் சார்க் முடியும் வரை கொழும்பிலேயே தங்கியிருந்தனர் எனவும் தெரியவருகிறது.
thank you:nitharsanam.com
Wednesday, 6 August 2008
சார்க் மகாநாட்டின் போது பாதுகாப்பு ஆலோசனைக்காக வெளிநாடொன்றின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டனர்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment