Tuesday, 12 August 2008

குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதலில் 12 படையினர் பலி - 18 பேர் காயம்

வவுனியா வடமேற்கு குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் முன்னகர்வு முயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பதில்தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 18 படையினர் காயமடைந்தனர்.

நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை 10.50 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிவரை தமது முன்னரங்கு
காவலரண்களில் இருந்து முன்னேற முயன்ற சிறிலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் பதில் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலிலேயே 12 படையினர் கொல்லப்பட்டும் 18 படையினர் காயமடைந்துமுள்ளனர்.

No comments: