Wednesday, 6 August 2008

மன்னாரில் எம்.ஐ.17 ரக உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல்

மன்னாரில் இன்று புதன்கிழமை பிற்பகல் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.17ரக உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் மன்னாரில் களமுனைகளுக்கு படையினரை ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.எம்.ஜி.ரக துப்பாக்கியினாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் இதனை மறுத்துள்ள படையினர் இயந்திர கோளாரு காரணமாகவே இந்த விமானம் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று மன்னார் பகுதியில் பறப்பில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.17ரக உலங்குவானூர்தி இயந்திரகோளாரு காரணமாகவே மன்னார் கடற்படை முகாமில் தரையிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுபோன்றே கடந்தவாரமும் மணலாறு பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த எம்.ஐ.27ரக உலங்குவானூர்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குள்ளானதை படைவட்டாரங்கள் மறுத்தன.

No comments: