Wednesday, 6 August 2008

விடுதலைப்புலிகள் விரைவில் பாரிய எதிர்த்தாக்குதலை நடத்தக்கூடும் - சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை

வன்னிப்பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினர் தொடுத்துள்ள யுத்த முனைப்புகளுக்கு எதிராக தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் குழுக்கள் பல சமர் நடக்கும் களமுனைகளுக்கு முன்னகர்த்தப்பட்டுவருவதாக ஆதாரமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறி லங்கா புலனாய்வத்துறை, இராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை சமர் நடக்கும் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணித் தளபதியான கேணல் தீபன் உட்பட்ட பல சிறப்பு தளபதிகளும் அவர்களது விடுதலைப்புலிகளின் சிறப்பு பிரிவினரும் வந்துள்ளதாகவும் அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய எதிர்த்தாக்குதல் ஒன்றை விரைவில் தொடுக்கலாம் எனவும் சிறி லங்கா பலனாய்வுத்துறை சிறி லங்கா இராணுவத்தினரை எச்சரித்துள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

No comments: