Wednesday, 6 August 2008

தொப்பிக்கலையில் படையினர் மீது விடுதலைப்புலிகள் அதிர்ச்சி தாக்குதல் – 23 படையினர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிக்கலை,
பெரியவட்டுவான் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இராணுவ தொடரணி ஒன்றை இலக்குவைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அணிகள் மேற்கொண்ட தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4படையினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30மணியளவில் பொலநறுவையில் இருந்து தொப்பிகல நோக்கி சென்றுகொண்டிருந்த ஜீப்வண்டி ஒன்றும் ட்ரக் வண்டி ஒன்றும் இந்த தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தொடரணியை நோக்கி கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து துப்பாக்கிசூடும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு விடுதலைப்புலிகளின் அணி திரும்பிச்சென்றுவிட்டதாகவும் இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற மேலதிக படையினர் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றதாகவும் தெரிவி;க்கப்படுகின்றது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த படையினர் கடும் தேடுதல் நடத்திவருவதுடன் காடுகள் நோக்கி செல்வீச்சுகளையும் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: