Wednesday, 6 August 2008

புலிகளுக்கு எதிரான போர் சுதந்திரத்தின் எல்லையை அண்மித்துள்ளது – சம்பிக்க

வடக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை சுதந்திரத்தின் எல்லையை அண்மித்துள்ளதாகவும் எனினும் அது முழுமையான வெற்றி அல்ல எனவும் உண்மையாண போர் தற்பொழுதே ஆரம்பித்திருப்பதாகவும் திடீரென மழை பொய்யாது போனால் போரில் படையினர் வெற்றிபெறுவர் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது படையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தற்காப்பு யுத்தத்தையே மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் உள்ள தமிழ் மக்கள் இதனை அறிந்துள்ளனர்.

கிழக்கை மீட்க்கும் போர் நடைபெற்ற போது, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தம்மை பாதுகாத்து கொள்ள ரிதீகம மற்றும் வெலிகந்தை ஆகிய சிங்கள பிரதேசங்களுக்கே சென்றனர் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.


வெளிநாட்டவர்கள் கூறுவது போல் சிங்களவர்கள் பாரிய வைரிகள், அழிவை ஏற்படுத்தும் கொலைக்காரர்கள் என தமிழ் மக்கள் நினைத்திருந்தால், அவர்கள் சிங்கள மக்களிடம் சென்றிருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பு நகரில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. பௌத்தர்கள் தமிழர்களுக்கு எதிராக எந்த கொடுமைகளையோ, தாக்குதல்களையே நடத்துவதில்லை எனவும் 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மேற்கொண்ட நடவடிக்கையே அன்றி சிங்களவர்கள் மேற்கொண்டதில்லை எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


விடுதலைப்புலிகள் கொழும்பில் குண்டு வெடிப்புகளை மேற்கொள்ளும் போதும், பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் போதும், வேறு நாடுகளை போல சிங்கள பௌத்தர்கள் கோபம் கொண்டு தாக்குதல்களை நடத்தவில்லை.

இதனால் வேறு நாடுகள் இலங்கையருக்கு ஆலோசனை கூற அவசியமில்லை எனவும் ரணவக்க கூறியுள்ளார்.


இதேவேளை ஜே.வீ.பீயினர் தமது 1982ஆம் ஆண்டு கொள்கை விளக்க அறிக்கையை முடிந்தால் மீண்டும் அச்சிடுமாறு சவால் விடுத்துள்ள அவர் அந்த கொள்கை விளக்கத்தில் தமிழர்களுக்கு தனியான சுயாநிர்வாக அலகு வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர பௌத்த அறநெறி பாடசாலைகளை தடைசெய்து எந்த சமயத்திற்கும் அரசாங்கம் அனுசரணை வழங்காது என கூறிய ஜே.வீ.பீயினர் தற்போது அறநெறி பாடசாலைகளுக்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மார்க்ஸ்சிஸம் மற்றும் கம்யூனிசவாதத்தின் இருள் மீண்டும் அச்சுறுத்தி வருவதாகவும் இதற்கு ஏமாற வேண்டாம் எனவும் 1953, 1971 மற்றும் 1989 ஆண்டு ஏற்பட்ட சம்பவங்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பளிக்க வேண்டாம் எனவும் சமபிக்க ரணவக்க கேட்டுள்ளார்.

No comments: