Friday, 15 August 2008

1977ஆம் ஆண்டு தமிழனப்படுகொலை ஆரம்ப நாள் இன்று

ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான 1977ஆம் ஆண்டு ஆவணிப் படுகொலை ஆரம்பித்த நாள் இன்றாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற தொடரூந்தும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடரூந்தும் அநுராதபுரத்தில் எரியூட்டப்பட்டு, மக்கள் உயிருடன் கொழுத்தப்பட்டனர்.

தமிழ் மக்களிற்கு எதிரான இந்த இனவழிப்பு நடவடிக்கை வவுனியா, திருகோணமலை, மலையகத்தில் பதுளை, கொழும்பு, இரத்மலானை என நாடு அனைத்திலும் மிக வேகமாகப் பரவியது.

தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது.

இருந்த போதிலும், கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,500ற்கும் அதிகம் என அரச சார்பற்ற மனிதநேய அமைப்புகளின் அறிக்கைகள் கூறுகின்றன.


No comments: