விடுதலை புலிகளின் இதயப்பகுதியை இராணுவம் அடைந்துவிட்டது இனிவரும் காலங்களில் மன்னிக்கவும் வாரங்களில் வடமத்திய மாகாணசபை தேர்தல் வரப்போகின்றது இத்தேர்தலில் வெற்று பெறுவதற்காக அரசிற்கு ஒரு மிகப்பெரிய இராணுவெற்றி தேவை படுகின்றது அவ்வெற்றியானது கிழிநொச்சியாக இருந்தால் மகிந்தவின் கட்சி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி.
இதை மையமாக வைத்து வன்னியில் அப்பாவி மக்களை துயரத்தில்தள்ளியவாறு தள்ளாடி தள்ளாடி நகர்கின்றது இராணுவத்தின் காய்கள் .
அதெவேளை சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று வவுனியாவிற்குச் சென்று தமது படைகளின் நடவடிக்கை பற்றி ஆராயந்திருக்கின்றார்.
வன்னி சிறீலங்கா படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட படைப் பரிவுகளின் துறைசார் பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்னார், வவுனியா, மணலாறு களமுனைகளில் தமது படைகளின் நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் ஆராயப்பட்டதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை புலிகள் இராசாயன் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என கருணா அம்மான் ஒரு பீதியை கிளப்பியிருப்பது சிங்கள இராணுவத்திற்கு ஒரு அதிர்ச்சியே!!!
இதற்கு பதிலளித்த சரத்பொன்சேக:
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் ஆற்றல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இல்லை என இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமாயின் ரஸ்யா அல்லது அமெரிக்க படைகளுக்கு நிகரான படைபலமொன்று இருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச படையினரின் வலிந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் காணப்படக்கூடிய சாத்தியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறுதி முயற்சியாக பிரபாகரன் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் பொலன்னறுவையில் வைத்து வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் இராணுவத் தளபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆனால் விடுதலைபுலிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
விடுதலை புலிகளின் புதிய களமுனை திருகோணமலை யாக இருக்குமானால் என்ன நடக்கும் என்று ஒரு ஆய்வு:
விடுதலை புலிகள் தமது ஈரூடக படையின் உதவியுடன் கடல் வளியாக வந்து திருகோணமலையை பிடித்தால் உலகமே உடனே சமாதான பேச்சிற்கு வரும் ஏனேனில் எல்லாருக்கும் திருக்கோணமலையின் முக்கியத்துவம் விழங்கும்,
விடுதலை புலிகள் கிழிநொச்சியையோ அல்லது யாழ்பாணத்தையோ அல்லது மட்டக்களப்பையோ தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைவிட திருகோணமலையை மட்டும் தம் கட்டுப்பாட்டில் வைதாலே உலகம் உங்கள் பக்கம் சாதகமாக பேசும்,
திருகோணமலையை பிடித்தால் அங்கிருந்து இடம்பெயரும் குடியேறிய சிங்கள மக்கள் அகதியாக்கப்படுவார்கள் அது சிங்கள அரசிற்கு ஒரு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் அதேவேளை திருகோணமலையினூடான வடபகுதி இராணுவத்தினற்கான விநியோகப்பாதையும் மூடப்படும்.
திருகோணமலையை பாதுகாக்க இராணுவம் மிகப்பெரிய பிரயத்தனத்தை எடுக்கும் அதேவேளை இந்தியாவின் முதலீடுகள் அங்கே உள்ளதால் இந்தியா அதிகளவான உதவிகளை இலங்கை இராணுவத்திற்கு வழங்கும் அல்லது தனது விமானக்கள் மூலம் நேரடியாக விடுதலைபுலிகளுக்கு எதிராக போராட வரலாம்
ஐசூர்யா இணையத்தில் வெளிவந்த ஒரு செய்தியின் படி தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது விமானத்தளமொன்றை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கப் படையினரின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் புதிய விமான இறங்குதளமொன்றை அமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் இரணமடுவில் அமைந்துள்ள இறங்குதளத்திற்குச் சேதமேற்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது முழுப் பலத்தைப் பயன்படுத்தி விமானத்தளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமைக்கப்பட்டுவரும் இறங்குதளத்தில் பாரிய விமானங்களை நிறுத்தக் கூடிய வசதிகள் காணப்படும் என இராணுவத் தரப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
புலிகளின் இரண்டு விமான இறங்கு தளங்களும் ஏ9 வீதிக்கு கிழக்காக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய ஆளில்லா உளவு விமானமொன்றின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை இராணுவத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த இறங்குதளத்தில் பாரிய விமானங்களை நிறுத்தக் கூடிய வசதிகள் காணப்படுவதால் ஏதாவது வளியில்(சில அரசுகளின் அல்லது அமைப்புகள் அனுசரணையில்) ஆயுதங்களை கொண்டுவந்து இறக்கலாம் இது சாத்தியம் ஏனெனில் விடுதலை புலிகளை முற்றாக அழிக்கமுற்பட்டால் இதனால் ஏற்படும் பாதக நிலைமை பற்றி உலக நாடுகள் அறியும்.
அவர்களுக்கு ஆயுத விற்பனை செய்ய முடியாமல் போகலாம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு யுத்த உதவி எனும் கடிவாளம் போடமுடியாமல் போகலாம்.
அதேவேளை வன்னி மோதலில் விடுதலைப்புலிகள் தோல்வியடைவார்கள் என இந்திய றோ உளவுப்பிரிவினர் இந்திய அரசாங்கத்திற்கு முதல் முறையாக அறிக்கை ஒன்றை சமாப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை செய்மதிப் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தருணர்கள் மூலம் றோ உளவுப் பிரிவினர் இந்த மோதல்களை கண்காணித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்தியத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. தமது முடிவை உறுதிப்படுத்திக் கொள்ள இந்திய றோ உளவுத்துறையின் டெல்லியில் உள்ள தலைமையத்தினர் இஸ்ரேலின் ஒபேக் செய்மதியின் உதவியையும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் விடுதலைப்புலிகளின் கடற்பிரிவினர் குறித்து இந்திய டோனியர் கப்பல் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முடியாமை,
விடுதலைப்புலிகளின் ஆயுத வலையமைப்பை சேர்ந்த 6 பேர் அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கைதுசெய்யப்பட்டமை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் நிதி திரட்டுவதற்கு தடையேற்பட்டமை மற்றும் கிழக்கு மாகாணம் கைப்பற்றபட்டமை ஆகிய விடயங்கள் விடுதலைப்புலிகள் வலுவிழப்பதற்கான காரணிகளாக அமைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
தமது புலனாய்வுத் தகவல்களின்படி இலங்கைப் படையினர் தமது தாக்குதல்களையும் முனைப்புகளையும் குறைப்பதே சிறந்தது என இந்தியப் புலனாய்வுத் துறையினர் அறிவுரை வழங்கினர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் புதுவகையான ஆபத்தான தாக்குதல் ஒன்றை நடத்துவதற்குரிய ஏதுநிலைகள் இருப்பதாக இதன்போது இந்தியப் புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா ஒருபோதும் விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை விரும்பாது. இதனால் தோல்வியடையும் விடுதலைப் புலிகளை பாதுகாப்பதற்கான வியூகத்தை இந்தியா தற்போது முன்னெடுத்துள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது அரசாங்கத்துக்கு சார்பான தமிழ் பிரதிநிதிகளுக்கு சலுகைகளை வழங்குவதனால் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தமிழ் மக்களின் ஆதரவினை பெறும்வரையில் இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் கருத்து தெரிவித்துள்ளமை குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து ரில்வின் சில்வா மேலும் கூறியதாவது, விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் தேவை இந்தியாவுக்கு உள்ளது. ஏனெனில் இலங்கையில் பிரச்சினைகள் தொடர்ந்தால்தான் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பிராந்திய காப்பு என்பவற்றில் வல்லரசாக திகழ முடியும்ஆனால் அடிக்கடி பிரபாகரன் பயன்படுத்தும் தத்துவம் இயற்கை எனது வளிகாட்டி அது எந்த களமுனைக்கான வளியை காட்டப்போகிறது என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்
No comments:
Post a Comment