அரச படைகள் வன்னியை நோக்கி நகரும் போது பாதிக்கப்படும் மக்கள் இராணுவ பகுதிகளுக்கு வருவது மிக குறைவாகவே உள்ளது. பாதிக்கப்படும் சாதாரண மக்கள் புலிகளின் பகுதிகளை நோக்கியே செல்கின்றனர்.
சண்டைகள் உக்கிரமடைந்து வரும் போது போர் நடக்கும் இடத்திலுள்ள மக்கள் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கியே செல்கின்றனர்.
உதவி நிறுவனங்கள் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளதாக தெரிவித்தாலும் , உண்மையான விபரம் கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
மக்கள் விடுதலைப்புலிகளது பகுதிகளுக்கு தானாகவே செல்லும் போது இராணுவமோ மக்களை புலிகள் மனித கேடயங்களாக பாவிப்பதாக தெரிவிக்கிறது.
போர் சூழல் காரணமாக பரிதவிக்கும் மக்கள் நிலை கூறும் புகைப்படங்கள் சில இவை:
கையில் கிடைத்ததோடு தப்பிச் செல்லும் சாதாரண மக்கள்...
அரச சார்பற்ற நிறுவனங்கள் அவர்களது தகவல்களை பதிவு செய்கிறது...
பாடசாலை ஒன்றில் தங்கியிருக்கும் ஏதிலிகள்...
இடம் இல்லாமை காரணமாக காட்டை துப்பரவு செய்து தங்க முயலும் சிலர்...
தாயின் சேலையை தொட்டிலாக்கி , வேதனை புரியாது பிஞ்சு சிரிப்பால் , மனித மனங்களை காயப்படுத்தும் ஒரு காட்சி...
நன்றி: பண்டார,அஜீவன்
No comments:
Post a Comment