வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.
படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
இதில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 19 படையினர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:
கிளைமோர் - 01
ரி56-02 ரக துப்பாக்கி - 01
ரவைக்கூடுகள் - 05
நடுத்தர ரவைகள் - 150
தலைக்கவசம் - 01
தண்ணீர்க்கலங்கள் - 04
தொடுகம்பிச்சுருள் - 01
குண்டு - 01
ரவைக்கூடுதாங்கி அணிகள் - 02
பை - 01
ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

No comments:
Post a Comment