Wednesday, 6 August 2008

சிறிலங்கா இந்தியாவின் 27ஆவது மாகாணமாகலாம் - ஜே.வி.பி. எச்சரிக்கை

சிறி லங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால், இந்தியாவின் 27 வது மாநிலமாக சிறி லங்கா மாறுவதை தடுக்கமுடியாது என ஜே வி பியினர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.

அரசாங்கம், சிறி லங்காவின் உரிமைகள் விட்டுக்கொடுக்கும் எந்த ஒரு மின்சார விநியோகத்திட்டத்திற்கும் இந்தியாவுடன், இணக்கம் தெரிவிக்கக்கூடாது எனவும் ஜே வி பி கோரியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துரைத்த ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க,

தமிழகத்;தின் மதுரையில் இருந்து தலைமன்னாருக்கு ஊடாக, மேற்கொள்ளப்படவுள்ள நீருக்கடியிலான மின்சார விநியோகத்திட்டம், வெறுமனே மின்சார விநியோகத்திட்டத்தை பெற்றக்கொடுக்கும் திட்டமாக அமையமாட்டாது.


மாறாக அரசியல், பொருளாதாரம் போன்ற அடிப்படைகளில் இந்தியா, இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்த திட்டம் உதவிவி;டக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


திருகோணமலை சம்பூரி;ல் அனல் மின்சார மையத்தின் அமைப்பு, தமிழகத்தில் இருந்து கடலுக்கடியிலான மின்சார விநியோகத்திட்டம், காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் இயக்கம், மன்னாரில் எண்ணெய்வள ஆய்வு மற்றும் கரையோர தொடரூந்து சேவைகளை புனரமைப்பது போன்ற திட்டங்களில் இந்தியாவுடன் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பிமல் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.


கடலுக்கடியிலான மின்சார விநியோகத்திட்டத்தின் மூலம் 1000 மொகாவோட்ஸ் அலகையும், சம்பூர் அனல் மையத்தின் மூலம் 500 மெகாவோட்ஸ் மின்சார அலகையும் மின்சார உற்பத்தியில் சேர்ப்பதன் மூலம்,


இலங்கையின் மின்சார விநியோகத்தில் 50 வீதத்தை ஆக்கிரமித்துக்கொள்ள இந்தியா முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பிமல் ரட்நாயக்க சுட்டிக்காட்டினார். இந்தியாவுடன் இவ்வாறான உடன்படிக்கைகளில் இணக்கம் தெரிவிப்பதனால், வரலாற்றில் ஒருபோதும், இலங்கைக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: